Sunday, 14 July 2013

சேமிக்கப் பழகு ! கவிஞர் இரா .இரவி !

சேமிக்கப் பழகு ! கவிஞர் இரா .இரவி ! 

வரவுக்கு மேலே செலவுகள் செய்யாதே ! 
வாடி நின்று வருத்தம் கொள்ளாதே ! 

வருமானத்தில் ஒரு பகுதி சேமிக்கப் பழகு ! 
தன்மானத்துடன் என்றும் வாழப் பழகு ! 

எலும்பில்லா எறும்பு கூட சேமிக்கின்றது ! 
எலும்புள்ள மனிதன் சேமிக்காதது ஏனோ ? 

எதிர்பாராத செலவுகள் வரும்போது ! 
எடுத்துச் செலவழிக்க உதவிடும் சேமிப்பு ! 

இன்றைய சேமிப்பு நாளைய பூரிப்பு ! 
இனிதே சேமித்தவர் இன்பமுடன் வாழ்வர் ! 

ஆடம்பரம் வேண்டாம் அறவே நிறுத்திடு ! 
அவசிய செலவுகள் மட்டுமே செய்திடு ! 

சிக்கனமாக இருந்தால் தினமும் சேமிக்கலாம் 
மெத்தனமாக இருந்தால் துன்பமே மிஞ்சும் ! 

வருங்காலம் வளமாக சேமிக்கப் பழகு ! 
வருத்தமின்றி வாழ்ந்திட சேமிக்கப் பழகு !

No comments :

Post a Comment